சென்னை ஜன, 21
திமுக இளைஞரணி வழிநடத்த உதயநிதி கிடைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். உதயநிதி பொறுப்புக்கு வந்த சிறிது காலத்திலேயே அசைக்க முடியாத கோட்டையாக இளைஞர் அணியை கட்டி எழுப்பி வருவதாக பாராட்டிய ஸ்டாலின் வலிமையான கொள்கை, உறுதியான பிடிப்பு இனிமையான பரப்புரை தொடர்ச்சியான உழைப்பு இவை எல்லாம் உதயநிதியிடம் இயல்பாக இருக்கும் ஒன்று என நிகழ்ச்சியுடன் கூறியுள்ளார்