ஆந்திரா ஜன, 20
பீகாரைத் தொடர்ந்து ஆந்திராவில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் நேற்று தொடங்கின. முதற்கட்டமாக மாநிலத்தில் 139 பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் ஒரே கட்டமாக 10 நாட்கள் நடைபெற உள்ளது. மே மாதத்தில் மக்களவையுடன் சேர்ந்து மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முன்னதாக கணக்கெடுப்பு முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.