புதுடெல்லி ஜன, 21
2019 ம் ஆண்டு அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், போப்டே, முன்னாள் நீதிபதிகள் அசோக் பூஷன் அப்துல் நசீர் மற்றும் தற்போதைய தலைமை நீதிபதி சந்திர சூட் ஆகியோருக்கு ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.