சென்னை ஜன, 17
ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகா கார்கே கடிதம் எழுதியுள்ளார். அதில் யாத்திரை உங்களது பங்கேற்பும் ஆதரவும் ராகுலுக்கு எழுச்சி மற்றும் உந்துதலை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். இதே போல் தமிழகத்தில் உள்ள திமுக அதன் கூட்டணி கட்சிகளில் இருக்கும் முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.