திருச்சி ஜன, 17
இந்திய அளவில் அனைத்து மாநிலங்களும் கலந்து கொள்ளும் கேலோ இந்திய விளையாட்டு போட்டிகள் வரும் ஜனவரி 19ம் தேதி தொடங்க உள்ளது. இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளார். ஜனவரி 31ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளானது சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ளன இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.