கேரளா ஜன, 15
பிரதமர் மோடி வரும் 16, 17 ஆகிய தேதிகளில் ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆந்திராவில் தேசிய சுங்க மறைமுக வரிகள் மற்றும் போதை பொருட்களுக்கான அகாடமி, துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழி துறைகளுடன் தொடர்புடைய முக்கிய உட் கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். கொச்சியில் 4000 கோடி மதிப்பிலான மூன்று பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.