சென்னை ஜன, 8
தமிழக ஆளுநர் ரவியை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சந்தித்து பேசினார். உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ள சென்னை வந்த கோயல், அந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். இந்நிலையில் இரவு 10 மணியளவில் கிண்டி ராஜ் பவன் சென்ற அவர், ஆளுநரை சந்தித்து பேசினார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.