சென்னை ஜன, 6
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமான முறையில் இன்று மாலை கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. விழாவில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்க உள்ளனர். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.