சென்னை ஜன, 7
முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள 50 நாடுகளை சேர்ந்த 450 தொழில் அதிபர்கள் உள்ளிட்ட 30 ஆயிரம் பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர். மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் தொழில்கள் அடிப்படையிலான பல்வேறு தனித்தனி அமர்வுகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.