செங்கல்பட்டு ஜன, 7
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் இருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆரஞ்சு அலர்ட் அப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.