சென்னை ஜன, 5
மாயாண்டி குடும்பத்தார் 2 படத்தின் அதிகார அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2009 ம் ஆண்டு இயக்குனர் ராசு மதுரவனின் இயக்கத்தில் வெளியான மாயாண்டி குடும்பத்தார் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பினை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் சீமான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அரசியலில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சீமான் இப்படத்தின் மூலம் மீண்டும் நடிகராக களம் இறங்குகிறார்.