சென்னை ஜன, 3
சென்னையில் வரும் 13ம் தேதி சென்னை சங்கமம் பிரம்மாண்ட கலை விழாவை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். ஜனவரி 14 முதல் ஜனவரி 17 வரை 18 இடங்களில் கலை விழாக்கள் நடத்தப்பட உள்ளது. இதில் 1500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சென்னையை தொடர்ந்து வேலூர், தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலியில் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.