சென்னை ஜன, 1
இன்று உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் வழிபாட்டு தலங்களில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது. தமிழகத்தில் அதிகாலையிலேயே நீராடி புத்தாடை உடுத்தி, கோவில்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு சிறப்பு வழிபாட்டில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வழிபாட்டு தலங்களில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.