Spread the love

கீழக்கரை ஜன, 1

கீழக்கரை வரலாற்று ஆய்வு மையம் மற்றும் தமிழ் சங்கம் உதயவிழா நிகழ்ச்சி ஹமீதியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை ஏ.ஜி.ஏ.ரிபாய்தீன் தொகுத்து வழங்கினார். கீழக்கரையின் தொன்மையான வரலாற்று நிகழ்வுகளை தமிழ் அறிஞர்கள் நினைவு கூறிய விதம் அனைவரின் புருவங்களையும் உயர்த்தியது.

முத்து, பவளம், சங்கு போன்ற கடலில் விளையும் பொருட்களை பல நாடுகளுக்கும் சென்று விற்பனை செய்வதில் கீழக்கரை வாணிப பெருமக்கள் பெரும் சிரத்தை எடுத்த நிகழ்வுகளால் கீழக்கரையின் கலாச்சாரம் உலகமெங்கும் பரவியதாக நினைவு கூறிய வரலாற்று ஆய்வாளர்களின் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

கல்வி மற்றும் சமூக நல பணிகளில் தடம் பதித்த சீதக்காதி அறக்கட்டளை நிறுவனம்,முகம்மது சதக் அறக்கட்டளை நிறுவனம்,கண்ணாடி வாப்பா அறக்கட்டளை நிறுவனங்களுக்கு பொற்கிழி விருதுகள் வழங்கப்பட்டன.

கீழக்கரையும் தமிழ் மொழியும் என்ற அறிய தகவல்களை இராமநாதபுரம் கம்பன் கழக செயலாளர் மானுட பிரியன்(எ)குதுபுதீன் ஐபக்,மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம்.கே.இ.உமர்,பரமக்குடி பேராசிரியர் ஹிதாயத்துல்லாஹ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அமீரக நாடுகளின் முதன்மை தமிழ் செய்தியாளர் முதுவை ஹிதாயத்,வரலாற்று ஆய்வாளர் மஹ்மூது நைனா, அப்துல் ரசாக், KLK வெல்ஃபேர் கமிட்டி பொருளாளர் ஷஃபீக் ஹாஜியார்,TPS.சுலைமான்,மூர் ஹஸனுதீன்,அரூஸிய்யா அரபிக்கல்லூரி மாணவர்கள்,ரோட்டரி கிளப் தலைவர் பொறியாளர் கபீர்,ஹமீதியா ஆண்கள் பள்ளி ஆசிரியர் சலீம்,மூர் ஜெய்னுதீன்,முஹிப்புல் உலமா மஃரூப் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி கலந்து கொண்டு சிறப்பித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

முன்னதாக அனைவரையும் முபாரக் அலி வரவேற்றார்.

ஜஹாங்கீர் அரூஸி

மாவட்ட நிருபர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *