ஆஸ்திரேலியா டிச, 26
பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மெல்பெர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி நிதானமாக ஆடி ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வார்னர் 38 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.