புதுடெல்லி டிச, 24
கூகுள் நிறுவனம் தனது டிஜிட்டல் விளம்பர விற்பனை பிரிவை மறு சீரமைக்க திட்டமிட்டுள்ளது .முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டுள்ளதால் 30,000 ஊழியர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில், அடுத்த மாதம் முதல் பிரம்மாண்ட ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.