சீனா டிச, 23
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானாரின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. கான்சு மாகாணத்தில் 117 பேரும், கின்காயில் 31 பேரும் பலியாகினர். ஆயிரம் பேர் காயமடைந்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு சீன அதிபர் உத்தரவிட்டுள்ளார்.