சென்னை டிச, 24
சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு போண்டா மணி கடந்த சில மாதங்களாக சிகிச்சையில் இருந்தார். நேற்று காலை டயாலிசிஸ் முடித்து வீடு திரும்பிய போண்டாமணிக்கு இரவு 10.30 மணி அளவில் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வீட்டிலேயே சுய நினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார். உடனே ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.