மும்பை டிச, 23
ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்த அனிமல் திரைப்படம் உலகம் முழுவதும் ₹ 862 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள் கிளம்பி வருகிறது. வசூல் ஆயிரம் கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதால், இந்த ஆண்டு வெளியாகிய ஆயிரம் கோடி வசூல் செய்த படங்கள் வரிசையில் அனிமல் படமும் இடம்பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.