சென்னை டிச, 23
எட்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக வரும் 27ம் தேதி தமிழக முழுவதும் மாவட்ட அளவில் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள் ஜனவரியில் நடைபெறும் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்பார்கள். இதில் தமிழகம் கேரளா ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய ஆறு மாநிலங்கள் கலந்து கொள்ளும்.