சென்னை டிச, 27
விடுதலை முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவில் விடுதலை முதல் மற்றும் இரண்டாம் பாகம் தேர்வாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளதால் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.