புதுடெல்லி டிச, 22
காங்கிரஸ் கட்சி கடந்த 138 வது ஆண்டு விழாவை முன்னிட்டு டிசம்பர் 18ம் தேதி முதல் தேசத்திற்கான நன்கொடை என்ற பெயரில் ஆன்லைனில் நன்கொடை வசூலித்து வருகிறது. ரூ.138 முதல் ரூ.1.38 லட்சம் வரை காங்கிரஸ் தொண்டர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அதிக தொகையை நன்கொடையாக அளிப்பவர்களுக்கு ராகுல்காந்தி கையெழுத்திட்ட டி-ஷர்ட் தொப்பி, காபி கோப்பைகளை பரிசாக வழங்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.