புதுடெல்லி டிச, 17
கன்னியாகுமரி-வாரணாசி செல்லும் காசி தமிழ்ச் சங்கம் விரைவு ரயிலை இன்று பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைக்கிறார். குமரி ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 6:30 மணிக்கு புறப்படும் வாராந்திர ரயில் டிசம்பர் 19ம் தேதி இரவு 11:35க்கு வாரணாசி சென்றடைகிறது. மேலும் குஜராத் மாநிலம் சூரத் நகரில் பிரம்மாண்டமான சர்வதேச வைரச் சந்தையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.