சென்னை டிச, 17
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று 6000 நிவாரணம் வழங்கப்பட உள்ள நிலையில் டோக்கன் கிடைக்கப்பெறாத அல்லது குடும்ப அட்டை இல்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நியாய விலை கடைகளில் உரிய படிவத்தை பெற்று நிவாரணத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.