கடலூர் டிச, 17
தென் இலங்கையை ஒட்டிய வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழையும், சென்னையில் சில பகுதிகளில் லேசான மலையும் பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.