Spread the love

சென்னை டிச, 17

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் இன்று விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பணியை முதல்வர் மு. க ஸ்டாலின் வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார். டோக்கன் அடிப்படையில் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும். காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *