புதுடெல்லி டிச, 12
2024 ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி அன்று துபாயில் நடைபெற உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த ஏலத்தில் பங்கேற்க உள்ள வீரர்களின் இறுதி பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது. அதில் 214 இந்தியர்கள் 119 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 333 வீரர்களின் பெயர்கள் பட்டியல் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அதில் 215 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் இதுவரை ஆடாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.