சென்னை டிச, 8
தனது நடிப்பை இளையராஜாவும் ஏ.ஆர் ரகுமானும் பாராட்டியது குறித்து ஜி.வி பிரகாஷ் பகிர்ந்துள்ளார். நாச்சியார் படத்தை பார்த்துவிட்டு அந்த பையன் நல்லா நடிச்சிருக்கான்டா என்று பாலாவிடம் இளையராஜா சொல்லி இருக்கிறார். சர்வம் தாள மயம் படம் பார்த்துவிட்டு எங்கேயுமே ஜி.வி தெரியவில்லை என்று ஏ ஆர் ரகுமான் பாராட்டினார். சினிமா பயணத்தில் இரண்டு ஜாம்பவான்கள் கூட வேலை பார்த்தது எனது பாக்கியமாக கருதுகிறேன் என மனம் நெகிழ்ந்து உள்ளார்.