புதுச்சேரி டிச, 3
ED அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்றது தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “தமிழக அரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை எடுத்துச் செல்கிறது. அமலாக்க துறையை பாரதிய ஜனதா கட்சி என்று நீங்கள் விமர்சித்தால் தமிழக காவல்துறையினர் என திமுகவா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.