புதுடெல்லி டிச, 4
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தமாக 19 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் 21 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்தொடர் தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 17 வது நாடாளுமன்றத்தில் நிறைவு கூட்ட தொடராகும். இதனால் இந்த கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.