சென்னை நவ, 29
சேரி பாஷை என்ற கருத்தால் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனை விசிக, காங்கிரஸ் கட்சிகள் கண்டித்த நிலையில் சென்னையில் உள்ள குஷ்பு வீட்டை காங்கிரஸ் கட்சியின் எஸ் சி பிரிவு அணியினர் நேற்று முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த காவல்துறையினர் அனுமதி இன்றி ஒன்றுகூடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் 140 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.