கர்நாடகா நவ, 27
ஐந்து மாநில தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக தெலுங்கானாவில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று முறை அங்கு பரப்புரையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மோடியை காண தொண்டர்கள் மரத்தின் மீது ஏறியதால் அதிர்ச்சி அடைந்த அவர் அசம்பாவிதத்தை தவிர்க்க இறங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.