சென்னை நவ, 26
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பருவமழை காரணமாக பூக்களின் வரத்தும் குறைவாக இருப்பதால் விலை உயர்வு கடுமையாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் 1200 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ மல்லிகை பூ இந்த வாரம் 1500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கனகாம்பரம் கிலோ 600, ஜாதிமல்லி கிலோ 1200, அரளிப்பூ கிலோ 200, சென்ட்டுப் பூ 100 என்று விலை உயர்ந்துள்ளது.