சென்னை நவ, 27
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்யும் என்றும், சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.