சென்னை நவ, 26
கார்மேகம் சோனை மழை பொழியும் மாதம் கார்த்திகை இந்த மாதத்தின் பௌர்ணமி திருநாளான இன்று தமிழர்கள் தங்கள் வீடுகளில் தீபமேற்றி சிவபெருமானை வழிபடுவார்கள். இது கார்த்திகை தீபத்திருவிழா என்று கொண்டாடப்படுகிறது. இன்று மாலை ஆறு மணிக்கு திருவண்ணாமலை உள்ளிட்ட கோவில்களில் மலை மேல் தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக சற்று முன் அண்ணாமலையார் கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.