புதுடெல்லி நவ, 25
டெல்லியில் இயங்கு வந்த ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 2021 ம் ஆண்டு முதல் தாலிபான் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான் ஆட்சியை இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில், இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்பட உள்ளது. நிரந்தர தீர்வு ஏற்படும் வரை, தூதரக சொத்துக்கள் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.