சென்னை நவ, 22
திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரனை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக குடியாத்தம் குமரன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இதே புகாரில் 2019 ம் ஆண்டும் குடியாத்தம் குமரன் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.