சென்னை நவ, 21
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தின் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டு விமானம் சேதம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து கூறியுள்ள இண்டிகோ நிறுவனம், விபத்து காரணமாக சென்னை முதல் திருச்சி வரை செல்லும் இண்டிகோ விமானத்தின் 24 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த விமானம் சரி செய்யப்பட்டு நாளை மீண்டும் விமான சேவை தொடங்கும் என்று கூறியுள்ளது.