உத்தராகண்ட் நவ, 22
உத்தராகண்டில் உத்தரகாசி யமுனோத்திரியை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12ம் தேதி சுரங்கப்பாதையில் மண் சரிந்து 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில், இரவு பகலாக 11 வது நாளாக மீட்பு பணி தொடர்கிறது. தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் மீட்பு பணி தீவிரமடைந்துள்ளது.