உத்தராகண்டம் நவ, 20
உத்ராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்திரகாசி யமுனோத்திரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு-பார்க்காட் இடையே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12ம் தேதி அதிகாலை சுரங்கப்பாதையில் மண் சரிந்து 41 தொழிலாளிகள் சிக்கிக்கொண்டனர். அவர்களை பல்வேறு துறைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இரவு-பகலாக மீட்கும் பணி ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது.