ராஜஸ்தான் நவ, 24
ராஜஸ்தானில் நேற்று பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்துள்ளது. மொத்தம் 200 இடங்கள் இருக்கும் நிலையில் அனைத்து தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டு பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 3ம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.