Spread the love

சார்ஜா நவ, 19

ஐக்கிய அரபு அமீரக சார்ஜாவில் நடைபெற்ற 42வது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் ஈரோட்டில் பிறந்து சார்ஜாவில் வசிக்கும் 7 வயது இந்தியப் பெண், உலகின் இளம் எழுத்தாளர் ரிதனி காதம்பரி தனது இரண்டாவது இருமொழி புத்தகமான ” புவியின் இதயம் (THE GREEN HAUNTER) ” தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நவம்பர் 12, 2023 அன்று, 11.00 மணிக்கு ஹால் எண் 7, எழுத்தாளர் மன்றத்தில், ரிதனி காதம்பரியின் புத்தகம், துபாயின் BTI நிறுவனர்,எழுத்தாளர் டாக்டர் ராச்சா வெளியிடப்பட்டு, இந்தியா இன்டர்நேஷனல் பள்ளியின் வகுப்பு ஆசிரியை ஆயிஷா முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

இதே மேடையில் கற்றல் கல்வி மைய நிறுவனர், எழுத்தாளர் முனைவர் ஸ்ரீ ரோகிணியின் சிறுகதை புத்தகம் “நிறா” அன்வர் குழுமத்தின் இயக்குநர் அன்வர்தீன் வெளியிட முதல் பிரதியை இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொண்டார்.சார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் பெருமைக்குரிய தருணமாக அம்மா மற்றும் மகள் இருவரும் தங்கள் புத்தகங்களை இரண்டாவது முறையாக இணைந்து அவரவர் புத்தகங்களை வெளியிட்டு சாதனை செய்தனர். இந்நிகழ்ச்சியில் அல் அய்ன் இந்தியன் அசோசியேஷன் தலைவர் முபாரக், துபாய் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், Spread Smiles நிறுவனர் மக்கள் ஆர்.ஜே சாரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

“நான் இயற்கையை நேசிக்கிறேன், என் சக குழந்தைகள் சமூகம் பற்றி எழுதுகிறேன்.உலகில் அறிய பட வேண்டிய பசுமை இயற்கையின் செய்திகளை எழுதி உள்ளேன். அனைத்து குழந்தைகளுக்கும் குறிப்பாக இளம் எழுத்தாளர்களை எழுதுவதற்கு ஊக்குவிப்பதும், இயற்கையை வளர்ப்பதும், ஆதரிப்பதும் எங்கள் தலைமுறையின் கடமை” என்று அவர் கூறினார். இளம் எழுத்தாளருக்கும் தாயாருக்கும் இந்த மாபெரும் சாதனைக்காக பல பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், அமைப்புகள், சங்கங்கள், குடும்பங்கள், நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

M. நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.- அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *