சென்னை நவ, 19
மகளிர் உரிமைத் தொகையை இனி ஒன்றாம் தேதியே வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் நிலையில் மாதம் தோறும் 14, 15ம் தேதிகளில் அந்த தொகை வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், 2024 ஜனவரி மாதம் முதல் 1ம் தேதியை பயனாளிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.