சென்னை நவ, 19
ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் எஸ் வெங்கடராமன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக வெங்கட ரமணன் மறைந்தார் என்றறிந்து வருத்தம் அடைந்ததாக கூறியுள்ளார். அவரை இழந்து தவிக்கும் அவரது மகளும், முன்னாள் தலைமைச் செயலாளருமான கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.