சேலம் நவ, 16
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிற்பகல் 4 மணி அளவில் ஈரோட்டில் இருந்து கார் மூலம் சேலம் வருகிறார். இதனைத் தொடர்ந்து சேலம் வரும் அவர் அடுத்த மாதம் 17ம் தேதி பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறும் மாநில இளைஞரணி மாநாட்டு திடலுக்கு செல்கிறார்.
அங்கு மாநாட்டு பந்தல் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் தொடர்ந்து அன்று பிற்பகல் நாமக்கல் மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். நாமக்கல்லில் மாலை 4 மணி அளவில் நடைபெறும் மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற சிறப்புரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சியினை செய்து வருகிறார்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை ஒட்டி சேலம், நாமக்கல் மாவட்ட திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.