மத்திய பிரதேசம் நவ, 17
மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக 230 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் இரண்டாவது இறுதி கட்டமாக 70 தொகுதிகளுக்கும் இன்று பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு தொடங்கி 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது மத்திய பிரதேசத்தில் 2,533 வேட்பாளர்களும் சத்தீஸ்கரில் 958 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.