Spread the love

துபாய் நவ, 14

ஐக்கிய அரபு அமீரக துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள லேண்ட்மார்க் கிராண்ட் ஹோட்டலில் திமுக சார்பில் அமீரக திமுக அமைப்பாளரும், புலம்பெயர் தமிழர் நலவாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரான் ஏற்பாடு மற்றும் முன்னிலையில் நடைப்பெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா. இந்நிகழ்ச்சியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் எம்.எம்.அப்துல்லா, திருச்சி சிவா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா பேசும்போது கருணாநிதியின் சாதனைகளையும், அவரது இலக்கிய படைப்புகள் குறித்தும், கருணாநிதி கொண்டுவந்த இலவசத் திட்டங்கள், மகளிர் கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியது குறித்தும், அரசு வருவாய் மேம்பட வழி வகுத்தது குறித்தும் விளக்கமாகப் பேசினார் மேலும், கருணாநிதியின் ஜனநாயக அணுகுமுறைகள் குறித்தும் அதற்கான உதாரணங்களையும் கூறினார். மேலும் திமுக அயலக அணியின் அவசியம் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் எம்.எம்.அப்துல்லா. எடுத்துரைத்தார்.

மேலும் துபாயில் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமீரக திமுக பொறுப்பாளரும், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய குழு உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரானை பாராட்டினார்.

அதனை தொடர்ந்து திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா பேசும்போது, கருணாநிதிக்கும் தனக்கும் இருந்த உறவையும், தன்னுடைய வளர்ச்சிக்கு இளம் வயதிலிருந்தே கருணாநிதி பெரும் ஆதரவாக இருந்தது பற்றியும் அவரது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.

மேலும் திமுக இக்கட்டான சூழலில் இருந்த போதெல்லாம் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்ததால் தான் கருணாநிதி அனைவர் மனதிலும் நிலைத்து நிற்பதாக பேசினார்.

அதனைத் தொடர்ந்து ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் மன்சூர், ஹுசைன் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எல்.கே.எஸ்.மீரான், ஊடகவியாளர் முதுவை ஹிதயாத்துல்லா, ஆர்.ஜே சாரா, தமுமுக அப்துல் ஹாதி, கவிஞர் சசிகுமார், நஜ்முதீன், பிலால் அலியார், மதிமுக பாலா, கவிஞர் மரியம் கபீர், அய்மான் சங்க நிர்வாகிகள்அதிரை சாகுல் ஹமீது, அப்துல் காதர் , முத்தமிழ் சங்க ஷா, ஈமான் ஜாகிர், காயிதே மில்லத் பேரவை ஹமீத் ரஹ்மான், பிரசன்னா , முஸ்லிம் லீக் பரக்கத் அலி , காமில் , தமிழ் செல்வன், அமீரகத் தமிழ் சங்கம் சிலு, சோசியல் ஒர்கர் ஶ்ரீலேகா, டயானா, ரெஙகராஜன், EMAAR இயக்குனர் ஆனந்த் ,மேலாளர் முபாரக், ஜெஸீலா பானு, ஆர்.ஜே அஞ்சனா, தமுமுக அப்துல் ஹாதி, இப்ராஹிம், சானியா, திருச்சி கோல்ட் ஹபீபுல்லாஹ் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் விருந்து உபசரித்து அமீரக திமுக அமைப்பாளரும், புலம்பெயர் தமிழர் நலவாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரான் நன்றிகளை தெரிவித்தார்.

M.நஜீம் மரைக்கா B.A.,

இணை ஆசிரியர்.

அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *