லண்டன் நவ, 13
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
ஜெய்சங்கர் தீபாவளிப் பரிசு வழங்கியுள்ளார். லண்டனில் உள்ள பிரிட்டனில் பிஎம்ஓ அலுவலகத்தில் நடந்த தேனீர் விருந்தில் ஜெய்சங்கர் மற்றும் அவரது மனைவி கியோகா ஜெய்சங்கர் கலந்து கொண்டனர். விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்த அவர் சுனக்கிற்கு மிகவும் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையொப்பமிட்டு தந்த பேட்டை வழங்கி ஆச்சரியப்படுத்தி உள்ளார்.