சென்னை நவ, 12
பூத் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியலை வரும் 21ம் தேதி சமர்ப்பிக்க அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. ஒரு ஓட்டுச் சாவடிக்கு 19 பேர் கொண்ட பூத் கமிட்டியின் பூத் கமிட்டி உறுப்பினர்களாக கட்சி நிர்வாகிகள் ஏழு பேர் நியமிக்கப்பட வேண்டும் என கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் பூத் கமிட்டி அமைக்காத மாவட்ட செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கட்சி தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.