சென்னை நவ, 12
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஸர் பைஜானில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்திற்கு அஜித்துக்கு பிடித்த கார் சேஸிங் சண்டைக்காட்சி ஒன்றை ஹாலிவுட் கலைஞர்கள் உதவியோடு விறுவிறுப்பாக படமாக்கி உள்ளனர். இதற்காக அஜித் மிகவும் கடினமாக உழைத்துள்ளதாக கூறப்படுகிறது.